மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
அடக்குமுறை எங்கள் அணுகுமுறை என்றேஅடங்காமல் ஆடும் அரசாங்கந் தன்னைஅடக்குவார் நாட்டுமக்கள் தேர்தலின் மூலம்!அடங்காமை வீழ்ச்சிக்கே வித்து.
திகிலின் பிடிகள் நெருக்கி அணைக்கதிகிலின் மடியில் துவண்டு விழுந்தேன்!திகிலின் தெருவில் தினமும் பயணம்!அகத்திலே நிம்மதி ஏது?
எப்படி உன்வாழ்க்கை இங்கே அமைகிறதோஅப்படி வாழ்தல் அறிவுடைமை -- எப்படியும்என்றும் வளைத்திடலாம் என்றுமட்டும் எண்ணாதே!பண்பால் வளைவதே வாழ்வு.