மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
இளமை இதயம் இயற்றும் கவிதைஇளமை இழந்தும் இருக்கும் ! - இளநீர்இளமை வழுக்கையைப் போலவே உன்தன்இளமைக் கவிதை இனிப்பு.
சொல்லில் இருக்கும் சுவையைக் கவிஞனோகல்லும் கரைய எழுதிடுவான் ! - நல்லகரும்பாய் இனிக்கச் சுடும்நெருப்பைக் கூடக்கருத்தாய் வடிப்பான் கவி !
வண்ண மயிலாட ! வண்டு மலர்நாட !சின்ன குயில்பாட ! சில்லென்று காற்றுவர !எண்ணம் சிலிர்ததாட ! என்நாவில் வந்தாடு !கன்னல் தமிழே கமழ்ந்து !