பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

Showing posts with label உமா. Show all posts
Showing posts with label உமா. Show all posts

35.காத்திடுவாய் கந்தா



காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமைக்
காத்தல்போல் காப்பாய்; கடம்பா கதறுகின்றேன்
காட்டுன் கனிவருளை கதிர்வேலா காகிதக்
கப்பல் கடலைக் கடக்க.

22.காதல்



என்னை உனதாக்கி்க் கொல்லுமது;என்விழியில்
உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது;என்னெதிர்நீ
மண்ணில் வரைகோடுங் காட்டுமது உன்னிரு
கண்ணில் வழியு மது.

13.பூமியில்




மெத்த படித்தும் பயனில்லை முன்னவர்
எத்தனையோ பட்டும் புரியவில்லை நித்தமிங்கு
போரை விரும்பி புரிந்திடுவார் பூமியில்
யாரைத்தான் நோவதோ போ.

பாசமுடன்

ஈழம்

Photobucket