மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
விண்கோழி இட்ட வெகுவெப்ப முட்டையிலேகண்விழித்த குஞ்சே கதிரவனா? - கோயிலிலேநேற்று சுடச்சுட நின்றுபெற்ற வெண்பொங்கல்சோற்றுருண்டை தானோ சுடர்!
எண்ணுதல் ஓர்கலை. எண்ணுதல் ஓர்தவம்.எண்ணுதல் இன்றோர் இயக்கவிதி - உண்மையில்எண்ணுதல் ஓர்பயிற்சி. எண்ணுதல் நாகரிகம்.எண்ணுதல் வாழ்வின் எழில்.